×

சிதம்பரம் நகருக்கு ஆளுநர் வருகை

சிதம்பரம், மே 24: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கார் மூலம் சென்னையில் இருந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்கு நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு வருகை தந்தார். பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, கடலூர் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ராஜசேகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், பல்கலைக்கழக துணைவேந்தர் ராம கதிரேசன், பதிவாளர் சிங்காரவேல் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் விடுதியில் தங்கிய ஆளுநர், மதிய உணவு சாப்பிட்ட பின் சீர்காழி சட்டநாதர் கோயிலுக்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார். ஆளுநர் வருகையை முன்னிட்டு சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

The post சிதம்பரம் நகருக்கு ஆளுநர் வருகை appeared first on Dinakaran.

Tags : Governor ,Chidambaram ,Tamil Nadu ,Governor RN Ravi Kar ,Kumbabhishekam ceremony ,Sirkazhi Chattanathar Temple ,Mayiladuthurai district ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...